FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரதமரின் சுதந்திர தின உரை: சிஐஐ வரவேற்பு

தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சி தொடர்பாக சுதந்திர தின உரையில் பேசியதை இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சி தொடர்பாக சுதந்திர தின உரையில் பேசியதை இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையானது மனித மேம்பாடு மீது சரியான முனைப்புக் காட்டுவதாக உள்ளது. அண்மைக்கால ஆண்டுகளில் நாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விரைவாக முடிவெடுத்தல், துரித செயல்பாடு, விளைவு கண்காணிப்பு ஆகியவை மீதான அரசின் வலியுறுத்தல் சமூகத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறது. இந்த நடவடிக்கையானது உள்நாட்டுத் தேவை மற்றும் விரைவான வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
50 கோடி மக்களைச் சென்றடையும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டமானது ஒரு மிகப்பெரிய திட்டமாகும். அடுத்த மாதத்தில் தொடங்க உள்ள இந்தத் திட்டம் மூலம் நாட்டிற்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக உற்பத்தித் திறன் ஏற்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பிரதமரின் தொலைநோக்குத் திட்ட உறுதியானது நாட்டுக்கான அறிவுசார் எல்லையை ஊக்குவிக்கும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைமை நிலைக்கு நாட்டை உயர்த்துவதற்கான நடவடிக்கையைப் பலப்படுத்துவதாக அமையும்.
இளையோர் மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நலிந்த பிரிவினர், பிராந்திய மேம்பாடு ஆகியவை குறித்த பிரதமரின் வலுவான வார்த்தைகள் தொழில் துறையில் அதிர்வலையை ஏற்படுத்தும். அதே போன்று, வீட்டு வசதி, மின்சாரம், துப்புரவு, காப்பீடு மற்றும் அனைவருக்குமான சுகாதார வசதி ஆகியவை தொடர்பான பிரதமரின் அறைகூவல் பேச்சு ஊக்குவிப்பதாக உள்ளது. மேலும், பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்திற்கான திசையில் தொழில் துறை மேலும் அதன் முன்முயற்சிகளை எதிர்நோக்குவதாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments