காஷ்மீர்: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க கிலானி அழைப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சில மாதத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை அந்த மாநில மக்கள் புறக்கணிக்க
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சில மாதத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை அந்த மாநில மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஹுரியத் மாநாடு பிரிவினைவாத கட்சியின் தலைவர் சையது அலி ஷா கிலானி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து கிலானி அளித்த அறிக்கையில், மக்கள் தேர்தல்களில் பங்கேற்பது, காஷ்மீர் பிரிவினைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளுக்கு துரோகம் இழைப்பதற்கு சமம். மக்கள் தேர்தல்களில் பங்கேற்கும் விஷயத்தை, இந்திய அதிகாரிகள் உலக அரங்கில் அவர்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் எதிர்வரும் மக்களவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் உள்பட அனைத்து தேர்தல்களையும் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தடுப்பு காவல்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் நைக்கூவின் தந்தை அஸாதுல்லா நைக்கூவை(70) போலீஸார் வியாழக்கிழமை தடுப்பு காவலில் வைத்தனர்.
அவந்திபோரா பகுதியில், பயங்கரவாதியின் தந்தையை போலீஸார் கைது செய்ததாக வதந்தி பரவியது. அந்த வதந்திக்கு பதிலளித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், பயங்கரவாதியான தனது மகனுடன் அஸாதுல்லா நெருக்கமாக உள்ளார். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவரை நாங்கள் கைது செய்யவில்லை. விசாரணைக்காக அழைத்து வந்திருக்கிறோம் என்றார்.
முன்னதாக, அவந்திபோரா பகுதியில் உள்ள பயங்கரவாத ஆதரவாளர்களின் மறைவிடங்களை பாதுகாப்பு படையினருடன் இணைந்து போலீஸார் அழித்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.