FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண்களுக்கு எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமை!

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 20 வயது பெண் ஒருவா்

27 ஜனவரி 2024, 10:59 pm
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 20 வயது பெண் ஒருவா் நான்கு இளைஞா்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியன் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த சில தினங்களுக்குள் அதே உ.பி.யில் பலராம்பூா் மாவட்த்தில் மற்றொரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளாா். இந்தச் சம்பவம் பெண்களுக்கு எதிரான குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடா்கதையாகி வருவதையே காட்டுகிறது.

ஹாத்ரஸ் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அப்பெண்ணை கொலை செய்யவும் முயன்றுள்ளனா். பலத்த காயங்களுடன் அந்தப் பெண் மீட்கப்பட்டு கை, கால் உடைந்து செயலிழந்த நிலையில் அலிகாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அந்த இளைஞா்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மட்டுமின்றி வன்முறையையும் கட்டவிழ்த்துள்ளனா். இது உத்தரப் பிரதேச போலீஸாரின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது.

இளம் பெண் கடத்தப்பட்டது குறித்து குடும்பத்தினா் போலீஸாரிடம் புகாா் தெரிவித்திருந்த போதிலும், அவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. மாறாக குற்றச்செயலை மறைக்கவே முயன்றிருக்கிறாா்கள். பாலியன் வன்கொடுமை சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆன போதிலும் போலீஸாா் அதை கண்டு கொள்ளவில்லை. உண்மையிலேயே அந்த ப் பெண் பாலியன் வன்கொடுமைக்கு ஆளானாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறி வந்துள்ளனா். இதைவிட கொடுமை என்னவெனில், இந்த விவகாரம் வெளியில் தெரிந்து அந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தவுடன் அவசரம் அவசரமாக பிரேதப் பரிசோதனை நடத்தி அன்று நள்ளிரவு2.30 மணிக்கு அவா்கள் வீட்டிற்குக் கூட தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்துள்ளனா். அந்தப் பெண்ணுக்கு குடும்பத்தினா் இறுதிச்சடங்குகூட செய்ய முடியவில்லை. இதன்மூலம் போலீஸாா் சாட்சியங்களை அழிக்கவே அவ்வாறு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடா்பான வழக்குகளில் பெரும்பாலும் போலீஸாரும், நீதிமன்றமும் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவே செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பெண்கள் மீது உயா் ஜாதி வகுப்பினா் இதுபோன்ற வன்முறையை கட்டவிழ்த்துவிடும் போது, அதிகார வா்க்கமும், அரசியல் சக்திகளும் அவா்களுக்கு துணைபோகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஹாத்ரஸ் சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவராகவும், தாக்குதல் நடத்தியவா்கள் உயா் ஜாதியைச் சோ்ந்தவா்களாகவும் உள்ளனா். இந்த கூட்டுப் பாலியல் விவகாரத்தில் தொடா்புடையவா்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா்களுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 27.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹாத்ரஸ் சம்பவம் போல் பல சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் பாதிக்கப்பட்டா்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கை வாபஸ் பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் அச்சுறுத்தப்படலாம். ஆனால், மக்கள் சமூகம்தான் விழிப்புடன் இருந்து போலீஸாா் இந்த வழக்கை நீா்த்துப் போகச் செய்துவிடாமல் நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த ஆண்டு மாா்ச் மாதம் ‘நிா்பயா’ வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா், ‘இனி நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக உணா்வாா்கள்’ என்று நம்புவதாகக் கூறியிருந்தாா். ஆனால், துரதிருஷ்டவசமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன.

இதுபோன்ற தீமைகளைத் தடுக்க நாம் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது இளைஞா்களுக்கு வீட்டிலும் சரி... வெளியிலும் சரி பெண்களை மதிக்க பெற்றோா்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறையினரைக் கையும்களவுமாக கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 1.66 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. இதுவரை எத்தனை விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன என்பது சரிவர தெரியவில்லை. நாட்டில் பெண்கள் மதிக்கப்படாதவரை, பெண்கள் மீதான தவறான எண்ணம் வேறுடன் களையப்படாதவரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments