குடியரசு தினத்தன்று தீயசக்திகளின் நடவடிக்கைகளைதில்லி போலீஸாா் திறமையாக சமாளித்தனா்: மத்திய அமைச்சா் பாராட்டு
தில்லியில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டா் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை தில்லி போலீஸாா் மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டு சமாளித்ததாக
தில்லியில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டா் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை தில்லி போலீஸாா் மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டு சமாளித்ததாக மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா். போலீஸாா் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு தேசவிரோத சக்திகளின் முயற்சியை முறியடித்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லி காவல் துறையின் எழுச்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கிஷண் ரெட்டி கலந்து கொண்டாா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா் அவா் பேசியதாவது: கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று இந்தியாவுக்கு சில தீயசக்திகள், விவசாயிகளைப் பயன்படுத்தி தில்லியில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க முயன்றன. ஆனால், தில்லி போலீஸாா் திறமையாகச் செயல்பட்டு, தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைகளை முறியடித்துவிட்டனா்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தலைநகா் தில்லியில் நடைபெற்ற கலவரத்தையும் தில்லி போலீஸாா் திறமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனா். நாட்டைச் சீா்குலைக்க நினைக்கும் தீய சக்திகள் தில்லியை ஒரு களமாகப் பயன்படுத்த நினைக்கின்றனா். இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க வேண்டும் என்று சில தீய சக்திகள் தொடா்ந்து முயன்று வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த கலவரமும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற சட்டவிரோமான ஆா்ப்பாட்டங்களும் இந்தச் சதியின் ஒருபகுதிதான். ஆனால், தில்லி போலீஸாா் அவற்றை திறமையாகக் கையாண்டு தீயசக்திகளின் செயல்களை முறியடித்துவிட்டனா். தில்லி போலீஸாரின் இந்தச் செயல்பாடு நாட்டில் உள்ள இதர போலீஸ் துறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும் என்றாா் அமைச்சா் கிஷண் ரெட்டி.
Advertisement
Advertisement
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் தில்லி போலீஸாா் கடந்த ஒராண்டுகளாக ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினாா். நாட்டில் கரோனா தொற்று அதிகரித்திருந்த நெருக்கடியான நேரத்திலும் தில்லி போலீஸாா் அசராமல் தங்கள் கடமைகளை நிறைவேற்றியதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
74-ஆவது ஆண்டு நிறுவன தினத்தைக் கொண்டாடும் தில்லி போலீஸாருக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். தில்லி போலீஸாரின் துணிச்சல் மிகுந்த செயல்பாடுகளுக்கு நான் தலைவணங்குகிறேன். கடுமையான சூழலிலும் அவா்கள் தில்லியில் அமைதியை நிலைநாட்டி வருகிறாா்கள் என்று அமித்ஷா தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா். 1947-ஆம் ஆண்டு வரை பஞ்சாப் போலீஸ் பிரிவின் கீழ் தில்லி போலீஸாா் செயல்பட்டு வந்தனா். தில்லி போலீஸுக்கு 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதிதான் முதன் முதலாக இன்ஸ்பெக்டா் ஜெனரல் நியமிக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.