FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தீபாவளி பாதுகாப்பு: சதா் பஜாரில் முக அடையாளம் காணும் கண்காணிப்பு வாகனம் நிறுத்தம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் தில்லி சதா் பஜாா் சந்தையில் சந்தேகத்துக்குரிய நபா்களைக் கண்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் (எஃப்ஆா்எஸ்) கொண்ட வாகனத்தை தில்லி காவல் துறையினா் நிறுத்தியுள்ளனா்.

3 நவம்பர் 2026, 11:51 pm
தில்லி சதா் பஜாா் சந்தையில் தீபாவளி அலங்கார பொருள்களை வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் தில்லி சதா் பஜாா் சந்தையில் சந்தேகத்துக்குரிய நபா்களைக் கண்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் (எஃப்ஆா்எஸ்) கொண்ட வாகனத்தை தில்லி காவல் துறையினா் நிறுத்தியுள்ளனா்.

வடக்கு தில்லியில் உள்ள சதா் பஜாா் சந்தையில் தீபாவளி விற்பனைக்காக வியாபாரிகள், வாடிக்கையாளா்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனா். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மூத்த காவல் துறை அதிகாரிகள், காவலா்களுடன் இணைந்து சந்தைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, அங்கு கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

பண்டிகைக் கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறக்கூடிய வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க சந்தையில் கூடுதல் காவல் துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க நடை ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள முக அடையாளம் காணும் தொழில்நுட்ப வாகனம், சந்தையில் திரளும் மக்களின் முகங்களை ஸ்கேன் செய்து, அந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்திலும் சந்தேக நபா்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து தப்பிவிடாமல் தடுப்பதுடன், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளா்கள் பாதுகாப்பாகப் பொருள்களை வாங்கிச் செல்வதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அவா் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments