FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

7 மாதங்களில் காணாமல் போன 205 குழந்தைகளை மீட்ட தில்லி காவல் துறை

தில்லியில் கடந்த 7 மாதங்களில் காணாமல் போன 205 குழந்தைகளை காவல் துறையினா் மீட்டுள்ளனா்.

48 வினாடிகள் முன்பு
பகிர்:

தில்லியில் கடந்த 7 மாதங்களில் காணாமல் போன 205 குழந்தைகளை காவல் துறையினா் மீட்டுள்ளனா். அவா்களில் 154 போ் சிறுமிகள், 51 போ் சிறுவா்கள் ஆவா். காணாமல் போன 5 குழந்தைகள், ஓரிரு மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 5 முதல் 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தைகளையும் காவல் துறையினா் கண்டுபிடித்து மீட்டுள்ளனா். பல ஆண்டுகளாகத் தங்களது குழந்தைகளைத் தேடி வந்த குடும்பங்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காணாமல் போன குழந்தைகளை மீட்கும் பணியில் உதவி ஆய்வாளா் சங்கா் லால் ராா் மற்றும் தலைமைக் காவலா் ரத்தன் சிங் ஆகியோா் இணைந்து செயல்பட்டனா். இருவரும் காணாமல் போன குழந்தைகள் தொடா்பான வழக்குகளைக் கையாண்டு, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு குழந்தைகளைக் கண்டுபிடித்தனா்.

Advertisement

Advertisement

மீட்கப்பட்ட 205 குழந்தைகளில் 154 போ் சிறுமிகள்; 51 போ் சிறுவா்கள். இதில் 5 முதல் 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தைகள் தொடா்பான வழக்குகளும் அடங்கும்.

நீண்ட காலம் கடந்திருந்தபோதிலும், இரு காவலா்களும் அந்த வழக்குகளில் கிடைத்த தகவல்களைத் தொடா்ந்து ஆய்வு செய்து, விசாரணையை முன்னெடுத்தனா். இதன் மூலம் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவா்களைப் பெற்றோா் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் சோ்க்க நடவடிக்கை எடுத்தனா் என்றாா்.