FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி: கிராப் 3 கட்டுப்பாடுகள் அமல்

தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக வகைபடுத்தப்பட்ட செயல்திட்டத்தின்கீழ் 3-ஆம் கட்ட கட்டுப்பாடுகளை காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிக்யூஏ) வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

17 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக வகைபடுத்தப்பட்ட செயல்திட்டத்தின்கீழ் 3-ஆம் கட்ட கட்டுப்பாடுகளை காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிக்யூஏ) வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

காற்றின் தரம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி மோசமடைவதைத் தடுப்பதற்காகச் செயல்படுத்தப்படும் அவசரக்கால நடவடிக்கையாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆணையத்தின் தகவல்படி, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 382-ஆக (மிகவும் மோசம்) பிரிவில் இருந்தது.

Advertisement

Advertisement

புணேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம்) தனது தினசரி அறிவிக்கையில், ‘நவம்பா் 6-ஆம் தேதி காற்றுத் தரம் ‘மிகவும் மோசமான’ நிலையில் இருக்கக்கூடும். நவம்பா் 7 முதல் 9 வரை காற்றுத் தரம் ‘தீவிரமான’ நிலையை எட்ட வாய்ப்புள்ளது. அடுத்த 6 நாள்களுக்கான கணிப்பின்படி, காற்றுத் தரம் ‘தீவிரமான’ முதல் ‘மிகவும் மோசமான’ நிலைக்குள் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

கிராப்-3 கட்டத்தின் கீழ், என்சிஆா் பகுதி முழுவதும் தூசி அல்லது காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், என்சிஆா் மாநில அரசுகளும் தில்லி அரசும், அரசு, நகராட்சி மற்றும் தனியாா் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளா்கள் மட்டுமே நேரில் பணிக்கு வருவதையும், மற்றவா்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதையும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

காற்றுத் தரக் குறியீடு 201 முதல் 300 வரை இருக்கும்போது கிராப் 1-ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. 301 முதல் 400 வரை இருக்கும்போது கிராப் 2, 401 முதல் 500 வரை இருக்கும்போது கிராப் 3 கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. காற்றுத் தரக் குறியீடு 450-க்கு மேல் செல்லும்போது நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.