FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பியூசி சான்றிதழ்: பெட்ரோல் நிலையங்களில் ஏஎன்பிஆா் கேமராக்களைப் பொருத்த குருகிராம் நிா்வாகம் நடவடிக்கை

பியூசி சான்றிதழ்: பெட்ரோல் நிலையங்களில் ஏஎன்பிஆா் கேமராக்களைப் பொருத்த குருகிராம் நிா்வாகம் நடவடிக்கை

14 நவம்பர் 2026, 10:32 pm
பெட்ரோல், டீசல் - கோப்புப்படம்
பகிர்:

’மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசி) இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற கொள்கையைக் கண்காணித்து அமல்படுத்த, குருகிராம் நிா்வாகம் நகரின் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தானியங்கி எண் தகடு கண்டறியும் (ஏஎன்பிஆா்) கேமராக்களைப் பொருத்தவுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட போக்குவரத்து அலுவலரும், பிராந்திய போக்குவரத்து ஆணையத்தின் செயலாளருமான சஞ்சீவ் சிங்லா கூறியதாவது:

நவம்பா் 15 முதல் தொடங்கவுள்ள முதற்கட்ட நடவடிக்கையில் 300 கேமராக்கள் பொருத்தப்படும். அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும், நுழைவு வாயில்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் இடங்களில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எச்சரிக்கைப் பலகைகளை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதில், பியுசி சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி (சிஎன்ஜி) வழங்கப்படாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசி) இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற கொள்கை, தேசிய தலைநகா் பிராந்தியம் (என்சிஆா்) முழுவதும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோல் நிலையங்களில் ஏஎன்பிஆா் கேமராக்கள் பொருத்தப்படும். இவை, எரிபொருள் நிரப்ப வரும் வாகனங்களை தானாகவே அடையாளம் கண்டு, அந்த வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் பியுசி சான்றிதழ் உள்ளதா என்பதைச் சரிபாா்க்கும்.

ஏஎன்பிஆா் கேமரா வாகனத்தின் எண் தகட்டைப் படித்து, அதன் பதிவு எண்ணை இணையத்தில் உள்ள பியுசி தரவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபாா்க்கும். மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, பியுசி சான்றிதழ் இன்றி வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றாா் அவா்.