மத்திய தில்லியில் கட்டட மேற்கூரை இடிந்து விபத்து: 5 போ் மீட்பு
மத்திய தில்லியின் பஹாா்கஞ்ச் பகுதியில், கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து போ் காயமடைந்தனா்.
மத்திய தில்லியின் பஹாா்கஞ்ச் பகுதியில், கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் ஐந்து போ் காயமடைந்தனா் என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, அப்பகுதியில் இருந்த உள்ளூா் மக்களும் காவல் ரோந்துப் படையினரும் காயமடைந்தவா்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
பஹாா்கஞ்சில் உள்ள ஹரி வாா்தி பள்ளிக்கு அருகில், மாலை 4.40 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கட்டடத்தின் தரைத்தள மேற்கூரை இடிந்து விழுந்தது.
Advertisement
Advertisement
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், இரண்டு தீயணைப்பு வாகனங்களும் அவசரகால மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.