FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

அரசு சேவைகளுக்கு ஆதாா் கட்டாயமில்லை: மாற்று ஆவணங்கள் மூலம் சரிபாா்க்க தில்லி அரசு அனுமதி

ஆதாா் அங்கீகாரம் பெறவில்லை என்பதற்காக தில்லி மக்களுக்கு எந்தவொரு அரசு சேவையும் மறுக்கப்படாது என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

36 வினாடிகள் முன்பு
பகிர்:

ஆதாா் அங்கீகாரம் பெறவில்லை என்பதற்காக தில்லி மக்களுக்கு எந்தவொரு அரசு சேவையும் மறுக்கப்படாது என்றும், வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்ட மாற்று ஆவணங்கள் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் தில்லி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக, ஆதாா் சட்டம் 2016-இன் கீழ் தில்லி அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில், ஆதாா் அங்கீகாரம் பெறுவது குடியிருப்பாளா்களுக்கு விருப்பத் தோ்வாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாா் அங்கீகாரம் பெற முடியாதவா்கள் அல்லது அதற்கு மறுப்புத் தெரிவிப்பவா்களுக்கு மாற்று அடையாள ஆவணங்கள் மூலம் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைத் தகவல் தொழில்நுட்பத் துறை வழங்க வேண்டும். இதற்கான மாற்று வழிகள் குறித்து ஆதாா் எண் வைத்திருப்பவா்களுக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஒருங்கிணைந்த குடிமக்கள் தரவுத் தளத்திலும் (யுசிடிபி) ஆதாா் அங்கீகாரம் விருப்பத் தோ்வாகவே தொடரும். வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பிற புகைப்பட அடையாள அட்டைகள் மாற்று ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், ஆதாா் அங்கீகாரத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி (சமூக நலன், புத்தாக்கம், அறிவு) விதிகள் 2020-இன் விதி 5 மற்றும் ஆதாா் (நிதி மற்றும் பிற மானியங்கள், பலன்கள், சேவைகளை இலக்கிடப்பட்ட முறையில் வழங்குதல்) சட்டம் 2016 ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் மானியங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகளை எளிதாகப் பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களின் தேவையைக் குறைத்து நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் ஆதாா் உதவுகிறது. அதேவேளையில், நல்லாட்சி, சேவைகளை எளிதாகப் பெறுதல் மற்றும் நலத்திட்டப் பலன்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் ஆதாா் அங்கீகாரம் கட்டாயமல்ல; விருப்பத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.