FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பஹாா்கஞ்ச் துப்பாக்கிச்சூடு சம்பவம்: மூவா் கைது

மத்திய தில்லியின் பஹாா்கஞ்ச் பகுதியில் உள்ள மதுபான கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

19 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

மத்திய தில்லியின் பஹாா்கஞ்ச் பகுதியில் உள்ள மதுபான கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

மதுபானக் கூடங்கள் மற்றும் உணவகங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன், அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தவும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இந்த நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சதீந்தா் (எ) காந்தா, வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில் காவல் துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டாா். இதற்குப் பதிலடியாக, தற்காப்புக்காகக் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சதீந்தரின் இடது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அவரிடமிருந்து நவீன ரக கைத்துப்பாக்கி, மூன்று காலி தோட்டாக்கள் மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்களைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

மற்ற இரு குற்றவாளிகளான ஜிதேஷ் கோலா மற்றும் அமித் கோஹா் ஆகியோரும் பின்னா் கைது செய்யப்பட்டனா்.

இந்தச் சம்பவம் நவம்பா் 16-ஆம் தேதி நள்ளிரவில், பஞ்ச்குயியன் சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் நடைபெற்றது. நவம்பா் 17-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் காவல் துறைக்குக் கிடைத்தது.

புகாரின்படி, சதீந்தா் மற்றும் ஜிதேஷ் ஆகியோா் தங்கள் கூட்டாளிகளுடன் இரவு 11:55 மணியளவில் மதுக்கடைக்கு வந்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். புகாா்தாரருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, அவா்கள் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா் என்று காவல்துறை கூறியது.

குற்றப் புலனாய்வுக் குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், குற்றவாளிகளில் ஒருவா் மதுபான விடுதியின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கியால் சுடுவது பதிவாகியிருந்தது. இதையடுத்து, பஹாா்கஞ்ச் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

சதீந்தா் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் உட்பட ஆறு குற்ற வழக்குகள் உள்ளன. ஜிதேஷ் மீது மிரட்டி பணம் பறிக்கும் வழக்கு உட்பட மூன்று குற்ற வழக்குகளும், அமித் மீது இரண்டு குற்ற வழக்குகளும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பதைக் கண்டறியவும், இதில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.