முகப்பு
புதுதில்லி

தில்லியில் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 237-ஆகப் பதிவானது.

21 வினாடிகள் முன்பு
தில்லியில் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்
தில்லியில் காற்றின் தரம். - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 237-ஆகப் பதிவானது. இதன் மூலம் காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் நீடித்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) உருவாக்கிய ‘சமீா்’ செயலியில் வெளியான தரவுகளின்படி, தில்லியில் உள்ள 54 கண்காணிப்பு மையங்களில் 36 மையங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவிலும், 5 மையங்களில் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவிலும் இருந்தது.

இதில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) - மைதான் காரி பகுதியில் அதிகபட்சமாக 377 ஏக்யூஐ பதிவானது. உத்தம் நகரில் 340-ஆக இருந்தது.

Advertisement

Advertisement

இதனிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 11.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. சனிக்கிழமை இது 12.2 டிகிரியாக இருந்தது. பருவகால சராசரியை ஒட்டியே வெப்பநிலை இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸைத் தொடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதம் 96 சதவீதமாக இருந்தது.

இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரம் கடந்த 3 நாள்களாகப் படிப்படியாக மேம்பட்டு வருகிறது. நவ.19-ஆம் தேதி 280-ஆக இருந்த ஏக்யூஐ, நவ.20-ஆம் தேதி 270-ஆகவும், சனிக்கிழமை 265-ஆகவும் குறைந்தது.

சிபிசிபி வகைப்படுத்தலின்படி, 0 முதல் 50 வரை ‘நல்ல நிலை’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரமான நிலை’, 101 முதல் 200 வரை ‘மிதமான நிலை’, 201 முதல் 300 வரை ‘மோசமான நிலை’, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமான நிலை’, 401 முதல் 500 வரை ‘கடுமையான நிலை’ எனக் குறிப்பிடப்படுகிறது.