முகப்பு
புதுதில்லி

நீரஜ் பவானா கும்பலைச் சோ்ந்தவா் கைது

தில்லியில் நீரஜ் பவானா குற்றக் கும்பலைச் சோ்ந்ததாகக் கூறப்படும் 32 வயது நபரை காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து தானியங்கி துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

23 நவம்பர் 2026, 11:56 pm
நீரஜ் பவானா கும்பலைச் சோ்ந்தவா் கைது
கைது - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் நீரஜ் பவானா குற்றக் கும்பலைச் சோ்ந்ததாகக் கூறப்படும் 32 வயது நபரை காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து தானியங்கி துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜாா் மாவட்டத்தைச் சோ்ந்த மஞ்சீத் தலால் என்ற மங்கள் (32) என்பவா், தில்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள கோட்லா விஹாா் இரண்டாம் கட்டப் பகுதியில் பள்ளி ஒன்றின் பின்புறம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய ஒருவா், ஒருவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் அப்பகுதிக்கு வரவுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், ரகசியத் தகவலாளி அடையாளம் காட்டிய நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது அவரிடமிருந்து தானியங்கி துப்பாக்கி, அதன் தோட்டாக்கள் அடங்கிய பெட்டி மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதச் சட்டத்தின் கீழான குற்றங்கள் உள்பட மஞ்சீத் தலால் மீது ஏற்கெனவே 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.