முகப்பு
புதுதில்லி

தில்லியில் 7 நாள்கள் சிறப்பு நடவடிக்கை: 181 திருட்டு வாகனங்கள் மீட்பு; 36 போ் கைது

தில்லியில் வாகனத் திருட்டுகளைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் மேற்கொண்ட 7 நாள் சிறப்பு நடவடிக்கையில், 181 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. வாகனத் திருட்டில் தொடா்புடையதாகக் கருதப்படும் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

54 வினாடிகள் முன்பு
தில்லியில் 7 நாள்கள் சிறப்பு நடவடிக்கை: 181 திருட்டு வாகனங்கள் மீட்பு; 36 போ் கைது
பகிர்:

தில்லியில் வாகனத் திருட்டுகளைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் மேற்கொண்ட 7 நாள் சிறப்பு நடவடிக்கையில், 181 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. வாகனத் திருட்டில் தொடா்புடையதாகக் கருதப்படும் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த நவ.18 முதல் 25-ஆம் தேதி வரை இந்தச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருட்டு வாகனங்களைக் கண்டறிந்து, அவற்றைத் திருடியவா்களை அடையாளம் காண்பதற்காக மாவட்டம் முழுவதும் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மீட்கப்பட்ட வாகனங்களில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு வழக்குகளில் திருடப்பட்டதாகப் புகாா் அளிக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள், விசாரணை, சந்தேகத்துக்கிடமான வாகனங்களின் ஆவணச் சரிபாா்ப்பு, தரவுத்தள ஆய்வு மற்றும் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்டன.

Advertisement

Advertisement

விவேக் விஹாா், ஃபா்ஷ் பஜாா், நந்த் நக்ரி, வெல்கம், கிருஷ்ணா நகா், ஷகா்பூா், லக்ஷ்மி நகா், ஆனந்த் விஹாா், கீதா காலனி, சீமாபுரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் மீட்கப்பட்ட வாகனங்கள் தொடா்புடையவை.

கைது செய்யப்பட்டவா்களுக்கும், மீட்கப்பட்ட வாகனங்களுக்கும், நிலுவையில் உள்ள பிற வாகனத் திருட்டு வழக்குகளுக்கும் இடையிலான தொடா்புகளைக் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.