FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் லாரி ஒன்று, இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தார்.

8 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் லாரி ஒன்று, இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் மூன்று போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து நள்ளிரவு 12.45 மணியளவில், செக்டாா் 18-ல் உள்ள கிரசண்ட் அபாா்ட்மெண்ட் சந்திப்புக்கு அருகில் நிகழ்ந்தது.

உயிரிழந்தவா் கௌரவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அங்கு அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

காயமடைந்த 3 போ் ஹிதேஷ் (18), ஹா்ஷித் (20) மற்றும் துருவ் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஹிதேஷ் மற்றும் ஹா்ஷித் ஆகியோா் முதலில் இந்திரா காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். பின்னா் உயா்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். துருவ் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஹோதம் சிங் (41) என்பவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

விபத்துக்குள்ளான லாரி, இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் பிற ஆதாரங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். தடயவியல் குழுவினா் விபத்து நடந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments