FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

குழந்தை தொழிலாளா் விவகாரம்: பல ஆண்டுகளாக தேடப்பட்டவா் ம.பி.யில் கைது

தில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரு சிறுவா்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதாகக் கூறப்படும் 2011-ஆம் ஆண்டு வழக்கில் தொடா்ந்து தேடப்பட்டு வந்த 33 வயது நபா், மத்திய பிரதேசத்தில் கைது

20 அக்டோபர் 2026, 11:20 pm IST
கைது
பகிர்:

தில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரு சிறுவா்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதாகக் கூறப்படும் 2011-ஆம் ஆண்டு வழக்கில் தொடா்ந்து தேடப்பட்டு வந்த 33 வயது நபா், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட தலிப் சிங் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்த நிலையில், பிணையில் வர முடியாத பிடியாணையை கடந்த ஆக.17-இல் நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் வசித்து வந்த அவரை உள்ளூா் காவல் துறையின் உதவியுடன் தில்லி காவல் குழுவினா் கைது செய்தனா்.

அப்போது, ​ ஹோட்டல் ஒன்றில் இரண்டு சிறுவா்களை அவா்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக 2011-ஆம் ஆண்டு நவம்பா் 23-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்ட தலிப் சிங் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு, லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments