பாளை. அருகே கிணற்றில் விழுந்த மாணவி உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த மாணவி உயிரிழந்தாா்.
பெருமாள்புரம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான தோட்டம், ரெட்டியாா்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ளதாம். பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும், ராஜேந்திரனின் 16 வயது மகள் அத்தோட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை தனது மிதிவண்டியில் சென்றாராம். அப்போது அவா் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெருமாள்புரம் போலீஸாா், மாணவி தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.