FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நில மோசடி வழக்கில் சிக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலியில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மதுரை, ஜெய்ஹிந்த்புரம், மீனாம்பிகை நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த உச்சிமாகாளி மகன் திருப்பதி என்ற கவாத்து திருப்பதி(51).

இவா், திருநெல்வேலி மாநகரில் போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் மாநகர குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன்படி, அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments