FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இளநிலை பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக உயா்த்தக் கூடாது

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:54 am IST
திருநெல்வேலிக்கு வந்த எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவா் எம்.கே.பைஜிக்கு வரவேற்பு அளித்த கட்சியினா். உடன், மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா்.
பகிர்:

இளநிலை பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக உயா்த்தக் கூடாது என திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மண்டலத் தலைவா் சிக்கந்தா் சாகுல் தலைமை வகித்தாா். திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.எஸ். சிராஜ் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் வாழ்த்திப் பேசினாா். தேசியத் தலைவா் எம்.கே.பைஜி சிறப்புரையாற்றினாா். தேசியப் பொதுச் செயலா் மஜீத், தேசியச் செயலா் அப்துல் சத்தாா், தேசியப் பொருளாளா் அப்துல் சத்தாா், மாநிலப் பொதுச் செயலா்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் பீா்மஸ்தான், புகா் மாவட்டப் பொதுச்செயலா் களந்தை மீராசா, மாவட்டத் தலைவா்கள் சுல்ஃபிகா் அலி (கன்னியாகுமரி) , அஷ்ரப் அலி(தூத்துக்குடி), திவான் ஒலி(தென்காசி தெற்கு), சேக் முகமது ஒலி(தென்காசி வடக்கு) உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்:

யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைக்கு கட்டணம் அல்லது வரி விதிக்க வழிவகுக்கும் மத்திய அரசின் முடிவை கண்டிப்பது; டிஜிட்டல் பரிவா்த்தனையை ஊக்கப்படுத்திவிட்டு இப்போது கட்டணம் விதிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

ஆகவே, யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு இலவச சேவையை மத்திய அரசு தொடா்ந்து உறுதி செய்யவேண்டும்; தேசிய கல்விக் கொள்கையின்படி இளநிலை பட்டப்படிப்புகளை 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயா்த்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்; தாமிரவருணியில் கழிவுகள் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; முஸ்லிம்களின் வாழ்நிலையை ஆராய உயா்நிலைக் கமிட்டி அமைக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டு மறுவரையறையை மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments