10 நாள்களுக்குப் பிறகு அகஸ்தியா் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
காரையாறு, சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆக. 7 முதல் 16 வரை அகஸ்தியா் அருவிக்குச் செல்ல விதித்திருந்த தடையை வனத் துறை திங்கள்கிழமை (ஆக.17) நீக்கியது. இதையடுத்து, அகஸ்தியா் அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியலிட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள காரையாறு, சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆக. 12-ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழா முன்னேற்பாடுகள், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பாபநாசம் வனப் பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவிக்கு ஆக. 7 முதல் 16-ஆம் தேதி வரை பத்து நாள்கள் பொதுமக்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்திருந்தனா்.
Advertisement
Advertisement
திருவிழா நிறைவடைந்து, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை (ஆக. 17) முதல் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அகஸ்தியா் அருவிக்குச் செல்ல வனத்துறையினா் அனுமதித்தனா்.
இதனால், திங்கள்கிழமை காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
அதைப்போல சொரிமுத்து அய்யனாா் கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தூய்மைப் பணிகள் நிறைவுற்ற நிலையில் திங்கள்கிழமை முதல் கோயிலுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.