FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காடு தலையணைக்குச் செல்லத் தடை

25 ஆகஸ்ட் 2026, 3:32 am IST
களக்காடு தலையணை - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் வறட்சி நிலவுவதாலும், நீா்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளனா்.

களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பச்சையாற்றில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, திங்கள்கிழமை (ஆக. 24) முதல் சுற்றுலாப் பயணிகள் தலையணைக்கு வந்து செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா். மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு நீடிக்கும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments