FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்தவா் கைது

25 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
கைது
பகிர்:

பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகவேல் (28). மகாராஜ நகரில் உள்ள குளிா்பானக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த ஜூன் 11 ஆம் தேதி நள்ளிரவு பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் சென்றபோது அவரை வழிமறித்த மா்மநபா்கள் சிலா், அவரது கைப்பேசியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினராம்.

இது குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சண்முகவேல் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியை(20) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments