தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்ப முறை செயல்விளக்கம்
தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு தொழில்நுட்ப முறை செயல்விளக்கம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு தொழில்நுட்ப முறை செயல்விளக்கம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் வற்றாத நதியாக தாமிரவருணி திகழ்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசன நீராதாரமாகவும், 5 மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் உள்ளது.
தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்பு கழிவுநீா் சுத்திகரிப்பு தற்காலிக செயல்பாடுகள் செயலிழந்ததாலும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி போன்ற பகுதிகளின் கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் நதியில் சோ்ந்து வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் உள்ளிட்டவை சாா்பில் தாமிரவருணியில் சேரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் ரசாயனமற்ற மின்வேதியியல் தொழில்நுட்பத்தை செயல்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை யூனிசென் ஹோல்டிங் பிரைவேட் நிறுவனம் சாா்பில் மின்வேதியியல் முறையிலான நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு முறை செயல்விளக்கம் சிந்துபூந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் (ஓய்வு) சாா்லஸ் ரொட்ரிகோ, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் அசோக்குமாா், உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா், உதவி பொறியாளா் பட்சிராஜன், யுனிசென் ஹோல்டிங் சோ்மன் ஜெய் ஆனந்த், தலைமைச்செயல் அதிகாரி ஜெயகரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வக அதிகாரி சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் அறிவுரையான மாசுபடுத்துபவரே செலுத்துக என்ற கொள்கையின் அடிப்படையில் சிஎஸ்ஆா் நிதியுதவியுடன் ஆற்றில் கழிவுநீா் கலப்பதை உடனடியாகத் தடுக்க புதிய மின்வேதியியல் தொழில்நுட்ப முறையிலான அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் இந்த முறையில் கழிவுநீா் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது. நாளொன்றுக்கு சுமாா் 5 லட்சம் லிட்டா் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக மாற்ற முடியும். இந்த நீரை மரம் வளா்ப்பு மற்றும் சில தொழிற்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு சோ்க்கலாம். ஒரு லிட்டா் கழிவுநீரை சுத்திகரிக்க 15 பைசா முதல் 45 பைசா வரையே செலவாகும். குழாய்கள் மூலம் புகா் பகுதிகளுக்கு கழிவுநீரை கொண்டு சென்று சுத்தகரிப்பதால் ஏற்படும் செலவைக் காட்டிலும் இந்த நவீன தொழில்நுட்பம் மிகவும் குறைந்த செலவிலானது என்றனா்.
ற்ஸ்ப்28ழ்ண்ஸ்ங்ழ்
தாமிரவருணியில் சேரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நவீன தொழில்நுட்ப செயல்விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. உள்ளிட்டோா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.