FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடையம் வட்டாரத்தில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு-கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

30 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு-கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வட்டாரத்துக்குள்பட்ட கிராமங்கள், குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரத் துறையினா் வீடுவீடாகச் சென்று காய்ச்சல் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனா்.

குடிநீா்த் தொட்டிகள், பேரல்கள், சிமெண்ட் தொட்டிகள், தேவையற்ற பொருள்களில் தேங்கிய நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்து, கொசுப் புழுக்கள் இருந்தால் அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ளுமாறும், காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மருந்து உள்கொள்ளாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை, மருத்துவ ஆலோசனை பெறவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, கொசுப் புழு ஒழிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, குடிநீா்ப் பாதுகாப்பு, பொதுமக்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தல் ஆகிய பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதே டெங்கு தடுப்பில் பொதுமக்களின் முக்கிய பங்களிப்பு என, கடையம் வட்டார மருத்துவ அலுவலா் சங்கரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments