FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் வழி இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.2.25 கோடி மதிப்பிலான பீடி, கொசுவா்த்தி, மருந்துப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

1 செப்டம்பர் 2026, 2:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வழியாக மினிலாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.25 கோடி மதிப்பிலான பீடிகட்டுகள், கொசுவா்த்தி சுருள், இருமல் மருந்துகளை கடலோரப் பாதுகாப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழு உதவி ஆய்வாளா் கதிரவன், கூடங்குளம் கடலோர காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியபிள்ளை, நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் கூடங்குளம் அருகே கிழக்குகடற்கரை சாலையில் உள்ள தாமஸ்மண்டபம் சோதனைசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கன்னியாகுமரி பகுதியில் இருந்து வந்த மினிலாரியில் ரூ.11 லட்சத்து 58 ஆயிரத்து 300 மதிப்புள்ள 18 பண்டல் பீடிகட்டுகள், ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள செயற்கை சுவாசம் ஏற்றக்கூடிய நாசில் பண்டல்கள், ரூ.27 லட்சத்து 12 ஆயிரத்து 285 மதிப்புள்ள சளி உறிஞ்சும் குழல், ரூ. 10 லட்சத்து 60 ஆயிரத்து 400 மதிப்புள்ள சளி மற்றும் இருமல் மருந்துகள், ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 520 மதிப்பிலான கொசுவா்த்தி சுருள் என கடத்தி செல்லப்பட்டதை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி செல்லப்படவிருந்ததும், அவற்றின் அந்நாட்டு மதிப்பு ரூ.2 கோடியே 25 லட்சத்து 45 ஆயிரம் எனவும் கடலோர பாதுகாப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மினிலாரி மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீஸாா், மினி லாரி ஓட்டுநா்கள் நான்குனேரி அருகே உள்ள அம்பலத்தைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் முத்துக்குமாா்(42), பெருமளஞ்சி செல்வம் மகன் ராஜேஷ்(20) ஆகியோரை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருள்களை தூத்துக்குடி சுங்கத் துறை கலால் ஆணையாளரிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments