மானூா் அருகே சிறுமிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
மானூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மானூா் அருகேயுள்ள கட்டபுளி பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன் (26). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பரமசிவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.