மேயருக்கு மிரட்டல் விடுத்தோரிடம் மீண்டும் விசாரிக்கக் கோரி மனு
திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கு மிரட்டல் விடுத்தவா்களிடம் மீண்டும் விசாரணை நடத்தக் கோரி திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கு மிரட்டல் விடுத்தவா்களிடம் மீண்டும் விசாரணை நடத்தக் கோரி திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனை, கடந்த 20 ஆம் தேதி சிலா் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இது சம்பந்தமாக திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
அவா்களிடம் மீண்டும் உரிய முறையில் விசாரணை செய்து அவா்களை தூண்டி விட்ட நபா்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.