புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
களக்காடு அருகே புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்ததாக இளஞ்சிறாா் உள்ளிட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்ததாக இளஞ்சிறாா் உள்ளிட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
களக்காடு அருகே சிதம்பராபுரம் பகுதியில் களக்காடு போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவா்கள் அஜித் (23), இளஞ்சிறாா் என்பதும், விற்பதற்காக 2 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, அஜித்தை கைது செய்தனா்; சிறுவனை திருநெல்வேலி இளஞ்சிறாா் நீதிக் குழுமத்திடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.