கல்லிடை அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு
கல்லிடைக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் மணி (62). இவா் தனது பேத்தி சீதாலட்சுமியுடன் (16) இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மதியம் திருநெல்வேலிக்குச் சென்றாா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் குடியிருப்பைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் ஆறுமுகம் திருநெல்வேலியில் இருந்து குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
கல்லிடைக்குறிச்சி, கரம்பை அருகே காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடலை போலீஸாா் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுமி சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.