சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
போத்தனூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
போத்தனூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
கோவை நஞ்சுண்டாபுரம் - போத்தனூா் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு இரவு சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம், அந்த முதியவா் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயமடைந்த முதியவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கணேசபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.