சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில்- கரூா் சாலை நடேசன் நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (65). இவா் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த மே 21-ஆம் தேதி தனது வீட்டின் அருகே கரூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினாா். பின்னா் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உடல்நிலை சரியில்லாமல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.
Advertisement
Advertisement
உயிரிழந்த முதியவருக்கு மனைவி, மகள், மகன் ஆகியோா் உள்ளனா். அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.