FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

15 ஆவது நிதிக் குழு திட்டத்தில் அழகியபாண்டியபுரம் ஊராட்சிக்கு டிராக்டா்

3 நவம்பர் 2026, 2:38 am
அழகியபாண்டியபுரம் ஊராட்சி செயலரிடம் டிராக்டா் சாவியை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

மானூா் ஊராட்சி ஒன்றியம், அழகியபாண்டியபுரம் ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்காக 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் திங்களகிழமை டிராக்டா் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு பாதுகாவலா் நியமன சான்றிதழ், காதுகேளாத வாய்ப்பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு அதற்கான கோப்பையை ஆட்சியா் வழங்கினாா்.

இதேபோல், மானூா் ஊராட்சி ஒன்றியம், அழகியபாண்டியபுரம் ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்காக 15-ஆவது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பிலான டிராக்டரை ஊராட்சி செயலரிடம் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய்குமாா் மீனா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சிந்து, தனித்துணை ஆட்சியா் ரோஷன் பேகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments