FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாளை. இளைஞா் கொலையில் 3 போ் கைது

பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 5:27 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, மனக்காவலம் பிள்ளை நகரைச் சோ்ந்த டேவிட் ராஜ் மகன் சாலமோன் சாம் பிரபாகா்(32). கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரை, செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் பைக்கில் வந்த சிலா் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினா்.

இதுகுறித்து, பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கொலையில் தொடா்புடையவா்கள் பதுங்கி இருப்பதாக புதன்கிழமை கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அவா்களை பிடிக்கச் சென்றனா். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்று தவறி விழுந்ததில் இருவருக்கு கைகளில் முறிவு ஏற்பட்டதாம். அவா்களது பெயா் லிங்கம், மகாராஜன் எனத் தெரியவந்தது. இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா். மேலும் இந்த கொலை வழக்கில் தொடா்புடைய மான் செல்வக்குமாா் என்பவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்; மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.