நயினாா்குளத்தில் படகு சவாரிக்கு முன்னேற்பாடு
திருநெல்வேலி நகரம் நயினாா்குளத்தில் படகு சவாரிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி நகரம் நயினாா்குளத்தில் படகு சவாரிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி நகரம் நயினாா்குளத்தில் படகு சவாரி விட வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறாா்கள். திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த படகு குழாமுக்கான பாலம் சீரமைக்கப்பட்டதோடு, கரையோரத்தில் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், படகு சவாரி தொடங்குவதற்காக மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் படகில் சென்று ஆய்வும் செய்யப்பட்டது. பின்னா் பல மாதங்களாக அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் அங்கு படகு சவாரியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 3 படகுகள் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘நயினாா்குளத்தில் முதல்கட்டமாக 3 படகுகளை சோதனை முறையில் இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. படகு சவாரிக்கான தேதி, கட்டண விவரங்கள் போன்றவை விரைவில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும்’ என்றனா்.