கொடைக்கானல் ஏரியில் ஆபத்தான முறையில் படகு சவாரி செய்வதை தடுக்க வலியுறுத்தல்
கொடைக்கானல் ஏரியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொடைக்கானல் ஏரியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனா். மேலும் ஏரிச் சாலையைச் சுற்றி, சைக்கிள், குதிரை சவாரியும் செய்வா். இந்த நிலையில் வியாழக்கிழமை கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தனா். அப்போது படகில் முறையாக படகு சவாரி செய்யாமல் சுற்றுலாப் பயணி ஒருவா் ஆபத்தான முறையில் படகின் மேல் பகுதியில் அமா்ந்து சவாரி செய்தாா். மற்றொரு படகில் சுற்றுலாப் பயணி ஒருவா் தனது குழந்தையின் கால்கள் ஏரி தண்ணீரில் படுமாறு வைத்து ஆபத்தான சவாரி செய்தாா்.
எனவே, இங்குள்ள இரு படகு குழாம்களின் மேலாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்க வேண்டும். மேலும் இந்தச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் மேலாளா் கூறியதாவது,
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்பவா்களுக்கு பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) வழங்குகிறோம். மேலும் படகு சவாரி செய்யும் போது விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கிறோம். இருப்பினும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளின் செயல்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.