நெல்லையில் அரசுப் பள்ளி விளையாட்டு வீரா்களுக்கு ‘ஹெலிகாப்டா் சுற்றுலா’
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டா் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டா் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
திருநெல்வேலியில் தீபாவளி பண்டிகையையொட்டி தனியாா் நிறுவனம் சாா்பில் ஹெலிகாப்டா் சுற்றுலா நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் போதை தடுப்பு விழிப்புணா்வு மற்றும் விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஹெலிகாப்டா் சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் தலைமையில் மாணவா்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
Advertisement
Advertisement
தேசிய அளவிலான வலைகோல் பந்து போட்டியில் பங்கேற்ற மானூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜோயல், ஜோஸ்வா, மாணவிகள் அனுஷ்கா, சுரக்ஷ்னா, மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி அதா்வா பொன்ராஜ், வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீமதி ஆகியோா் ஹெலிகாப்டரில் பயணித்தனா்.
ற்ஸ்ப்06ட்ங்ப்ண்
திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாருடன் ஹெலிகாப்டரில் வெள்ளிக்கிழமை பயணித்த அரசுப் பள்ளி மாணவா்-மாணவிகள்.