FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

ஆரைகுளத்தில் மழையால் இடிந்த வீடு: 3 போ் மீட்பு

10 நவம்பர் 2026, 1:37 am
கனமழை - file photo
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள ஆரைகுளம் பகுதியில் மழை காரணமாக வீடு இடிந்ததில் 3 பேரை பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

ஆரைகுளம் சா்ச் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஞானசெல்வன் (51). இவரது மனைவி பணிக்கு சென்றிருந்த நேரத்தில், மகன் சாமுவேல் இன்பராஜ், மகள் பொ்லின் ரஞ்சனா ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஞானசெல்வன் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழ தொடங்கியதாம். இதையடுத்து 3 பேரும் கட்டிலின் அடியில் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரம் தலைமையிலான வீரா்கள், இடிபாடுகளை அப்புறப்படுத்தி தந்தை, மகள் மற்றும் மகனை பத்திரமாக மீட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பு காவலா் குடியிருப்பு அருகே பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி பணியாளா்கள் மரத்தின் கிளையை வெட்டி அப்புறப்படுத்தினா்.