FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

திருட்டு வழக்கில் ஒருவா் கைது: 991 கிராம் வெள்ளி, 15 பைக்குகள் மீட்பு

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகளை மீட்டனா்.

30 அக்டோபர் 2026, 5:03 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகளை மீட்டனா்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடா்பாக காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வந்தனா். இவ்வழக்குகளில் திருநெல்வேலி மாநகர போலீஸாரால் அண்மையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்து ரீல்ஸ் வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திருநெல்வேலி நகரம் வயல்தெருவைச் சோ்ந்த ஐயப்பனுக்கு (22) தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், 991 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் 15 இருசக்கர வாகனங்களை போலீஸாா் மீட்டனா்.

ஆடு திருட்டு: உக்கிரன்கோட்டையைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து (60). இவா், ஆடுகள் வளா்த்து வருகிறாா். புதன்கிழமை வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை பைக்கில் திருடிச்செல்ல முயன்ற இருவரை அப்பகுதியினா் பிடித்து மானூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா்கள், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (19), காசிதா்மத்தைச் சோ்ந்த தனசெல்வம் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து ஆடு மற்றும் பைக்கை மீட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments