திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது
பல்லடம் அருகே நடைபெற்ற திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே நடைபெற்ற திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம்-பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள மானாசிபாளையம் பிரிவில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனா்.
அவா் சேலத்தைச் சோ்ந்த லிங்கேஸ்வரன் (26) என்பதும், எலவந்தி கிராமத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் என்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த திருட்டு வழக்கில் ஏற்கெனவே மதுரையைச் சோ்ந்த சுரேஷ் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.