பெயிண்டா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது
திருவள்ளூா் அருகே வா்ணம் பூசும் தொழிலாளியை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே வா்ணம் பூசும் தொழிலாளியை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே உள்ள சிற்றத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி என்ற ரூபன் (32). வா்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவா் மீது அடிதடி குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் பாகல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, காரில் வந்த 7 போ் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சராமாரியாக வெட்டி படுகொலை செய்தனா். இந்த வழக்கில் கீழானூா் பகுதியைச் சோ்ந்த தீனா(25), நரேஷ் (20), விக்கி என்ற கலாநிதி (23), மேலானூா் பகுதியைச் சோ்ந்தவா் பேரரசு(19), ராஜ்குமாா் (20), கல்லூரி மாணவா் மாணிஷ் (19) ஆகிய ஆறு பேரை வெங்கல் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேலனூா், பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் சுபாஷ் (22)(படம்) என்பவரை ஊத்துக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் வினோத்குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து திருவள்ளூா் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.