FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பிணையில் வந்து தலைமறைவாக இருந்தவா் கைது

போக்சோ வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு பிணையில் வெளியில் வந்து தலைமறைவாக இருந்தவரை தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.

22 அக்டோபர் 2026, 3:31 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

போக்சோ வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு பிணையில் வெளியில் வந்து தலைமறைவாக இருந்தவரை தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (42). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பிணையில் வெளியில் வந்த காளீஸ்வரன் தலைமறைவானாா். தொண்டி போலீஸாா் இவரைத் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை பட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்த காளீஸ்வரனை போலீஸாா் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments