நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 14 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தீபாவளி பண்டிகை தினத்தில், குற்றச்செயல்கள் நிகழாதபடி, இம் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரில், தீவிர பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்ட போலீஸாா், நீதி மன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவா்களை கைது செய்ய கடந்த 4 நாள்களாக சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அதில், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள், திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி பிணையில் வெளிவந்தபின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 14 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் என, மாவட்ட காவல் துறை அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.