FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

தச்சநல்லூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

40 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

தச்சநல்லூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா், சங்கரன்கோவில் சாலை பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சங்கா்(40). கடந்த ஆண்டு வழக்கு ஒன்றில் தச்சநல்லூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவா் பின்னா் பிணையில் வெளிவந்தாா். இந்நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சங்கரை தச்சநல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments