விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இருவா் கைது
திருநெல்வேலி அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், கொள்ளை வழக்கில் தொடா்புடைய தங்கபாண்டியன் (27), மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய தம்பான் (24) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தனா்.
இந்நிலையில் தொடா்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இவா்கள் இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தங்கபாண்டியன், தம்பான் ஆகிய இருவரையும் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement