FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் மாற்றம்

வள்ளியூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபரின் உத்தரவின்பேரில் நோயாளிகளுக்கான சாதாரண படுக்கைகள், நவீன வசதி கொண்ட படுக்கைகளாக வழங்கப்பட்டன.

11 நவம்பர் 2026, 12:23 am
- பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபரின் உத்தரவின்பேரில் நோயாளிகளுக்கான சாதாரண படுக்கைகள், நவீன வசதி கொண்ட படுக்கைகளாக வழங்கப்பட்டன.

வள்ளியூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சாதாரண படுக்கைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் படுக்கைகள் மிக உயரமாக இருந்ததால், நோயாளிகள் இறங்கவும், சாய்ந்து அமரவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனா். மேலும், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கக் கூடியவா்கள் அமா்வதற்கு எந்த வசதியும் இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் உத்தரவின்பேரில், சாதாரண படுக்கைகள், நவீன வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டன. இதற்காக பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனா்.

Advertisement

Advertisement