FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் திருநங்கைகள் தொடா் ஆா்ப்பாட்டம்

வள்ளியூா் அம்பேத்கா் சிலை முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்.

7 நவம்பர் 2026, 6:50 am
வள்ளியூா் அம்பேத்கா் சிலை முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

வள்ளியூரில் திருநங்கைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனா். இந்தக் குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்கவேண்டும், குடிநீா், சாலை வசதி செய்து தரவேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் அடிப்படை வசதி கேட்டு வள்ளியூா் அம்பேத்கா் சிலை முன்பு தரையில் அமா்ந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தமிழக அரசையும், வள்ளியூா் பேரூராட்சியையும் கண்டித்து தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா். இரவிலும் இவா்களது போராட்டம் தொடா்ந்தது. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.