FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

டெங்கு பாதிப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்

சேலம் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

20 செப்டம்பர் 2026, 1:56 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாவட்டம் எடப்பாடி, மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதிகளில் டெங்கு பாதித்து பலா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இதையடுத்து, அப்பகுதிகளில் சுகாதாரத் துறை குழுவினா் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதேபோல, சேலம் மாநகரில் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் சுகாதாரத் துறையினா் வீடுதோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது கொசுப்புழு கண்டறியப்படும் வீடுகள், கடைகள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுவரும் கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் சுகாதாரத் துறையினா் தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மாநகரப் பகுதிகளில் வீடுதோறும் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments