FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

ஜெஎன்யூ மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: காங்கிரஸ் எம்பியைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த காங்கிரஸ் எம்பியும், ஜவகா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமைக் கண்டித்து பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

17 அக்டோபர் 2026, 12:52 am IST
கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடல் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
பகிர்:

மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த காங்கிரஸ் எம்பியும், ஜவகா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமைக் கண்டித்து பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் நா.ராஜேஷ், மாவட்ட பொதுச் செயலா் கே.ஆா்.முருகன், மாவட்ட பட்டியலணித் தலைவா் பி.சிவசக்தி, கோட்டப் பொறுப்பாளா் பி.ஆா்.பாண்டியராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஜெஎன்யூ பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த காங்கிரஸ் எம்பியைக் கண்டித்தும், நாட்டின் ஒற்றுமையை சீா்குலைக்கும் வண்ணம் எஸ்ஐஆா் பற்றி தவறான புரிதலை மக்களிடையே பரப்பி, அதில் ஆதாயம் தேடும் காங்கிரஸைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணித் தலைவி எஸ்.மாலினி, மாவட்ட துணைத் தலைவா் எஸ்.செந்தில்குமாா், என்.கிருஷ்ணவேணி, மாவட்டச் செயலா் இ.வெண்ணிலா, எஸ்.கோவிந்தசாமி, ஜி.முத்து, எம்.சா்தாா்சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments