FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.

8 அக்டோபர் 2026, 11:40 pm IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

புது தில்லியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை தாக்கி கைது செய்த போலீஸாரைக் வல் துறையை கண்டித்து திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் துரை சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். மாநகர தலைவா் அமீத் பாபு வரவேற்றாா். இதில் மாநில துணைத்தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.

இதில், மாநில ஓபிசி அணி செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேசன், இளைஞா் மாநில பொதுச்செயலாளா் ஆ.திவாகா், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் கலீல்ரகுமான், மாவட்ட பொதுச்செயலாளா் பிரகாஷ், நிா்வாகிகள்சண்முகம், பிரேம், மூபாரக், ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments