பட்டாசு வெடித்ததில் மோதல்: 6 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டாசு வெடித்ததில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டாசு வெடித்ததில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகே வடக்கு புளியங்குளத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்தது தொடா்பாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு, கம்புகளால் தாக்கிக் கொண்டனராம். இதில் காயமடைந்த நம்பி, அவரது மனைவி இசக்கியம்மாள் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்கண்ணன், களக்காடு காவல் ஆய்வாளா் மோகன அய்யா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
களக்காடு காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாா்களின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே ஊரைச் சோ்ந்த குமாா் (47), ஜெகதீஷ் (45), செல்வநவீன் (22), இசைசெல்வன் (20), கலைசூா்யா (20), இசக்கிபாண்டி(22) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.